நீதி கிடைக்கும்வரை அஸ்தியை கரைக்கமாட்டேன்: தற்கொலை செய்த பெங்களூரு பொறியாளரின் தந்தை பேட்டி

தன் மகனை துன்புறுத்திய அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று பவன் குமார் கூறி உள்ளார்.
நீதி கிடைக்கும்வரை அஸ்தியை கரைக்கமாட்டேன்: தற்கொலை செய்த பெங்களூரு பொறியாளரின் தந்தை பேட்டி
Published on

சமஸ்திபூர்:

பெங்களூருவில் வசித்து வந்த அதுல் சுபாஷ் என்ற ஏ.ஐ. பொறியாளர், அவரது மனைவி வழக்குகள் தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்தியதாலும், ஜீவனாம்சம் கேட்டு துன்புறுத்தியதாலும் மனமுடைந்து சமீபத்தில் தற்கொலை செய்தார். தற்கொலைக்கு முன்பு அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். வீடியோவும் பதிவு செய்து வைத்திருந்தார். அதில், தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து விவரித்துள்ளார். மேலும் மனைவி நிகிதாவும் அவரது தாயார் நிஷாவும் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அதுல் சுபாஷின் மனைவி, மாமியார் மற்றும் மைத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, தனது மகன் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை மகனின் அஸ்தியை கரைக்கப்போவதில்லை என அவரது தந்தை பவன் குமார் கூறி உள்ளார். தன் மகனை துன்புறுத்திய அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

பீகார் மாநிலம் சமஸ்திபூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பணத்திற்காக என் மகன் அவனது மனைவியால் துன்புறுத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டான். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும் நான் கேட்டுக்கொள்வது இதுதான்.. தயவு செய்து எங்களுக்கு நீதி வழங்குங்கள்" என்றார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com