பெட்ரோல், டீசல் விலை உயருமா? - மத்திய பெட்ரோலிய மந்திரி விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயருமா என்பது குறித்து மத்திய பெட்ரோலிய மந்திரி விளக்கம் அளித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயருமா? - மத்திய பெட்ரோலிய மந்திரி விளக்கம்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறுகையில்,

தற்போது நாட்டில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை இல்லை. நாம் கச்சா எண்ணெய்க்கு 85 சதவீதமும், எரிவாயுவுக்கு 55 சதவீதமும் இறக்குமதியை சார்ந்திருந்தபோதிலும், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது.

மாநில தேர்தலை ஒட்டி பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது, தற்போது மீண்டும் அவற்றின் விலையை உயர்த்தும் என்ற குற்றச்சாட்டு தவறு. இந்த விஷயத்தில் மக்கள் நலன் கருதி தேவையான முடிவுகளை நாங்கள் எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் மேலும் சில நாட்கள் சர்வதேச சூழ்நிலையை கவனித்தபிறகு எண்ணெய் விலையை உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நேற்று, அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.) விலை நேற்று ஒரு கிலோவுக்கு 50 பைசா அதிகரிக்கப்பட்டிருக்கிறது. டெல்லியின் அண்டை நகரங்களான நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஜியாபாத்தில் ஒரு கிலோவுக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com