செப்டம்பர் மாதம் முதல் மேற்கு வங்காளத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? - மத்திய அரசு விளக்கம்

மேற்கு வங்காளத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் இடையே கடுமையான அதிருப்தியை இது ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் மாதம் முதல் மேற்கு வங்காளத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? - மத்திய அரசு விளக்கம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் பீகார், குஜராத், மிசோரம், நாகலாந்து ஆகிய மாநிலங்களிலும், லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திலும் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் மது விற்பனை செய்வதற்கும், மது அருந்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுபவர்கள் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதி முதல் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது மேற்கு வங்காளத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில், 'உள்துறை மந்திரி அமித்ஷா இதுபோன்ற அறிவிப்புகள் எதுவும் வெளியிடவில்லை. இது ஒரு வதந்தி என்று கூறப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com