

புவனேஸ்வர்,
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசுகள் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, இந்த நிதியுதவியை வழங்க உள்ளதாக ஒடிசா மாநில அரசு நேற்று அறிவித்தது. இதுகுறித்து மாநில மருத்துவ கல்வி இயக்குனரக தலைவர் மொகந்தி கூறியதாவது:-
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இத்தொகை வழங்கப்படும். தற்கொலை செய்து கொண்ட, விபத்துகளில் இறந்த கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினரும் இந்த நிதியுதவி பெற தகுதியுடையவர்கள் ஆவர். கொரோனா உயிரிழப்புகளை மீண்டும் சரிபார்க்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒடிசாவில் கொரோனாவுக்கு இதுவரை 8 ஆயிரத்து 187 பேர் இறந்துள்ளனர்.