பத்மநாபசுவாமி கோயில் விவகாரம்: ரகசிய அறையை திறக்கும் விஷயத்தில் அனைவரின் கருத்தையும் கேட்பேன் - வழக்கறிஞர்

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் விவகாரத்தில் ‘பி’ எனும் ரகசிய அறையை திறக்கும் விஷயத்தில் தொடர்புடைய அனைவரின் கருத்தையும் கேட்பேன் என்றார் வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவி செய்யும் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம்.
பத்மநாபசுவாமி கோயில் விவகாரம்: ரகசிய அறையை திறக்கும் விஷயத்தில் அனைவரின் கருத்தையும் கேட்பேன் - வழக்கறிஞர்
Published on

திருவனந்தபுரம்

பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்று திருவாங்கூர் அரச குடும்பம் என அனைத்துத் தரப்பாரின் கருத்தையும் கேட்பேன் என்றார் கோபால் சுப்ரமணியம். கோயிலில் ஆறு மணி நேரத்தை ஆய்வுக்காக செலவழித்த அவர் மூல விக்கிரகத்திற்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

நேற்று ரகசிய அறையை திறப்பதை எதிர்க்கும் அரச குடும்பத்தை சந்தித்துப் பேசினார். அரச குடும்பம் இந்த அறையைத் திறப்பதானது நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகளை மீறுவதாகும் என்றனர். அவர் சந்தித்தப்போது பல்வேறு மூத்த அதிகாரிகளும், கோயில் பட்டர் சதீஷ் நம்பூத்திரி ஆகியோர் உடனிருந்தனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் கோயிலின் நான்கு அறைகள் திறக்கப்பட்ட போது கோடிக்கணக்கில் மதிப்புள்ள பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஜூலை 4 ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே எஸ் கேஹர் மற்றும் டி ஒய் சந்திரசூட் ஆகியோர் மூடப்பட்டிருக்கும் பி அறையும் திறக்கப்பட வேண்டும் என்றனர். அந்த அறையில் மர்ம சக்தி இருப்பதால் திறக்கப்படாமல் இருப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். அந்த அறை மர்ம சக்தி யுடன் ஏராளமான விலைமதிப்பில்லா பொக்கிஷங்களுடன் இருப்பதாக கூறப்படுவதால் அதை ஆராய விரும்புவதாகவும் அமர்வு தெரிவித்தது.

கோயிலில் நிதி முறைகேடுகள் நடைபெறுவதாக சொல்லப்பட்ட புகாரைத் தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com