மத்திய மந்திரி ஆகிறாரா சுப்ரியா சுலே?

சுப்ரியா சுலேவுக்கு மத்திய கேபினட் மந்திரி பதவி கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய மந்திரி ஆகிறாரா சுப்ரியா சுலே?
Published on: 

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்க சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதா கூட்டணியில் சேரவும் சரத்பவார் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக சரத்பவாரின் மகளும், கட்சியின் செயல் தலைவருமான சுப்ரியா சுலேவுக்கு மத்திய கேபினட் மந்திரி பதவி கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பா.ஜனதா தலைமையிலான மராட்டிய மாநில அரசில் 2 கேபினட் மந்திரி பதவிகள் மற்றும் 2 இணை மந்திரி பதவிகளை சரத்பவார் கட்சி கேட்பதாகவும் கூறப்படுகிறது.

மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீலுக்கு நிதித்துறையும், ஜித்தேந்திர அவாத்துக்கு மற்றொரு மந்திரி பதவியும் வழங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. எனினும் இந்த தகவல்களை சரத்பவார் கட்சி மறுத்துள்ளது.

X