

புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியின்போது மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் கடந்த மாதம் 3-ந்தேதி ஒட்டுமொத்த தொடருக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதன்படி மாணிக்கம் தாகூர், பிரசாந்த் படோல் உள்பட 7 காங்கிரஸ் எம்.பி.க்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சேர்ந்த சு.வெங்கடேசன் எம்.பி.யும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி வரை இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.
ஆனால் பட்ஜெட் தொடரின் 2-ம் பகுதி கடந்த 9-ந்தேதி தொடங்கியது முதலே இந்த 8 எம்.பி.க்களின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து ஓம் பிர்லா தலைமையில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் இந்த உறுப்பினர்களின் தண்டைைனய ரத்து செய்வது என முடிவு செய்யப் பட்டதாக தெரிகிறது. அதன்படி அவர்களது தண்டனை இன்று (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்யும் அறிவிப்பு வெளியாகும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.