இந்தியாவில் மீண்டும் டிக் டாக் செயலிக்கு அனுமதியா? மத்திய அரசு விளக்கம்


இந்தியாவில் மீண்டும் டிக் டாக் செயலிக்கு அனுமதியா? மத்திய அரசு விளக்கம்
x

டிக் டாக் செயலியை மீண்டும் இந்தியாவில் பயன்படுத்த முடிவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன.

புதுடெல்லி,

இந்தியா–சீனா இடையே உறவு வலுப்பெற்று வரத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள டிக் டாக் செயலியை மீண்டும் அனுமதிக்கப்போவதாக வந்த செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா–சீனா இடையேயான உறவை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில்தான், பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிக் டாக் செயலியை மீண்டும் இந்தியாவில் பயன்படுத்த முடிவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன.

சீனாவை தலைமையிடமாகக் கொண்ட பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக் டாக் செயலியில் பதிவாகும் தகவல்கள், சீன அரசுடன் பகிரப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.

தற்போது இந்தியா–சீனா இடையேயான உறவு மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், மீண்டும் டிக் டாக் செயலியை மத்திய அரசு அனுமதிக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாயின. ஆனால் இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. டிக் டாக் தடையை நீக்கும் எந்த உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற எந்தவொரு அறிக்கையும், செய்தியும் தவறானது என தெரிவித்துள்ளது.

1 More update

Next Story