தவெகவுடன் பயணிக்க விருப்பம்: விஜய் உடன் கூட்டணி வைக்க மே.வங்க கட்சி முடிவு

மேற்கு வங்க அரசியலில் பரபரப்புக்கு பெயர் போன ஹுமாயுன் கபீர், முன்னதாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்.
தவெகவுடன் பயணிக்க விருப்பம்:  விஜய் உடன் கூட்டணி வைக்க மே.வங்க கட்சி முடிவு
ஹுமாயுன் கபீர்,விஜய்
Published on: 

கொல்கத்தா,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உடன் இணைந்து பயணிக்க விரும்புவதாக மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆம் ஜனதா உன்னயன் கட்சியின் நிறுவனர் ஹுமாயுன் கபீர் தெரிவித்துள்ளார்.

நேரில் சந்தித்து பேச திட்டம்

சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைக்கு எதிராக வலுவான குரல் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பாக தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

யார் இந்த ஹுமாயுன் கபீர்?

மேற்கு வங்க அரசியலில் பரபரப்புக்கு பெயர் போன ஹுமாயுன் கபீர், முன்னதாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் ஆவார். மேற்கு வங்கத்தில் "பாபர் மசூதியை மீண்டும் கட்டுவேன்" என்று இவர் பேசிய பேச்சு அம்மாநில அரசியலில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

ஆம் ஜனதா உன்னயன் கட்சி

இதனை தொடர்ந்து, கட்சி ஒழுங்கீன நடவடிக்கையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். கட்சியை விட்டு வெளியேறிய பின்னர், அவர் தனியாக 'ஆம் ஜனதா உன்னயன் கட்சி' என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

தற்போது தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் எடுத்து வரும் அரசியல் நகர்வுகள் தேசிய அளவில் கவனம் பெற்று வரும் நிலையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு கட்சி அவருடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com