பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

இன்று தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 29-ந் தேதி வரை நடக்கிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த நிலையில் இன்று தொடங்கும் இந்த குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 29-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும். இந்த தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 16 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

இதற்கிடையே, கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க மத்திய அரசு நேற்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இரு அவைகளின் அரசியல் கட்சி குழு தலைவர்களுக்கு நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில், பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.

தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள், விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com