

பெங்களூரு,
பெங்களூருவில் உள்ள விப்ரோ நிறுவனத்திற்கு கடந்த மாதம் தாக்குதல் நடத்தப்படும் என அடையாளம் தெரியாதவர்களிடம் இருந்து மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டு போலீஸ் விசாரித்து வருகிறது. இதனையடுத்து பாதுகாப்பையும் விப்ரோ அதிகரித்தது. இப்போது மீண்டும் விப்ரோ நிறுவனத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
விப்ரோ வெளியிட்டு உள்ள அறிக்கையில், இரண்டாவது முறையாக எங்களுக்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது என்பதை உறுதி செய்கிறோம்... இதனால் நிறுவனத்தின் நடவடிக்கையில் எந்தஒரு பாதிப்பும் கிடையாது. என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் எந்த விதமான மிரட்டல் என்பதை விப்ரோ தெளிவு செய்யவில்லை. போலீஸ் கூடுதல் கமிஷ்னர் கேமந்த் நிம்பால்கார், இரண்டாவது முறையாக மிரட்டல் வந்ததை உறுதி செய்து உள்ளார்.
இரண்டாவது முறையாக விப்ரோவிற்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்து உள்ளது. மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பிய அடையாளம் தெரியாத நபர் பிட்காயினில் ரூ. 500 கோடியை கேட்டு உள்ளார். விப்ரோ ஊழியர்கள் மீது பயோ-கேஸ் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது, என கேமந்த் நிம்பால்கார் கூறிஉள்ளார். தொடர்ச்சியாக மிரட்டல் வருவதை அடுத்து விப்ரோ நிறுவனத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டும் வருகிறது.