பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது

உத்தரப் பிரதேசத்தின் மீரட் சிக்னல் படைப்பிரிவில் பணியாற்றிய , இந்திய ராணுவ வீரர், பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார்.
பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது
Published on

மீரட்

கடந்த சில நாட்களுக்கு முன் மராட்டிய மாநிலம் நாக்பூரில் பிரமோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வாலை ராணுவத்தின் உளவுப்பிரிவு, மராட்டியம் மற்றும் உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் இணைந்து கைது செய்தது.

பிரமோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான், அமெரிக்கா உள்பட பிற நாடுகளுக்கு தெரிவித்ததாக என்ஜீனியர் நிஷாந்த் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களின் பெயரில் பேஸ்புக் கணக்குகளை தொடங்கி பாகிஸ்தான் உளவுத்துறை கூறிய ஆசைவார்த்தையில் சிக்கி இத்தகவல்களை அவர் தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் சிக்னல் படைப்பிரிவில் பணியாற்றிய , ராணுவ வீரர் ஒருவர் பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த காஞ்சன் சிங் இராணுவத்தில் 10 வருடங்கள் பணிபுரிந்து வந்தார். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக அவர் உளவுத்துறையின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.பாகிஸ்தானின் உளவுத்துறை முகமை ISI "இரகசியமான மற்றும் முக்கிய தகவல்களை" அவர் பகிர்ந்துகொள்வதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ புலனாய்வாளர்கள் காலையில் ராணுவ வீரர் கைது செய்யபட்டது குறித்து தெரிவித்ததாக உத்தரபிரதேச போலீஸ் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com