இந்தியாவில் தான் ...! 5 முறை முதல்வர், கையிருப்பு ரூ.1520, வங்கி கணக்கில் ரூ. 2410, மொபைல் போன் இல்லை

திரிபுரா முதலமைச்சர் மானிக் சர்க்கார் நாட்டின் மிக சிறிய முதல் அமைச்சராக தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றி வருகிறார். அவரது மொத்த கையிருப்பு ரூ.1,520 ஆகும். #ManikSarkar #TripuraChiefMinister #Tripuraelection
இந்தியாவில் தான் ...! 5 முறை முதல்வர், கையிருப்பு ரூ.1520, வங்கி கணக்கில் ரூ. 2410, மொபைல் போன் இல்லை
Published on

அகர்தலா

திரிபுரா மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக தான்பூர் தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் தலைவரும் முதல் அமைச்சருமான மானிக் சர்கார் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார். அதில் தனது நிதி விரங்களை தெரிவித்து உள்ளார். அவரது அபிடவிட்டில் ஜனவரி 20 ந்தேதி வரை அவரது வங்கி கணக்கில் ரூ 2,410.16 இருந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 2013 தேர்தலில் அவரது வங்கி கணக்கில் ரூ.9720.37 இருந்து உள்ளது. அதை விட தற்போது குறைந்து உள்ளது.

திரிபுராவின் நீண்ட கால முதலமைச்சர் சர்க்கார்தான் ஆறாவது முறை அங்கு அவர் முதல் அமைச்சராக இருந்து உள்ளார். 1998 ஆம் ஆண்டு முதல் முதல் அமைச்சராக இருந்து வருகிறார்.

69 வயதான மார்க்சிட் கம்யூனிஸ்ட் தலைவரான அவர் தனது சம்பளத்தை கட்சி நிதியாக வழங்கி வருகிறார். அதற்கு பதில் அவர் தனது வாழ்வாதாரத்திற்காக கட்சியிலிருந்து 10,000 ரூபா மாதாந்திரம் கட்சி கொடுப்பதை பெற்றுக்கொள்கிறார்.

அவரது அபிடவுட்டில் அகர்தலாவில் 0.0118 ஏக்கர் பரப்பளவில் விவசாய அல்லாத நிலம் உள்ளதாகவும் ,அவரது உடன் பிறந்தோருடன் இணைந்து ஒரே பரம்பரையாக சொத்தாக அது உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

திரிபுராவில் 5 முறை முதலமைச்சராக இருந்த சர்க்காரிடம் ஒரு மொபைல் போன் இல்லை. அவருக்கு சமூக ஊடக கணக்கு, மின்னஞ்சல் கணக்குகளும் இல்லை.

அவரது மனைவி பஞ்சாலி பட்டாச்சார்ஜி, ஒரு ஓய்வுபெற்ற மாநில அரசாங்க ஊழியர் ரூ . 20,140 கையில் இருப்பு வைத்து உள்ளார்.

பட்டாசார்ஜி தனது வங்கிக் கணக்குகளில் ரூ. 12,15,714.78 வைத்து உள்ளார்.

சர்க்கார் மற்றும் அவரது மனைவி அகர்தலாவில் மாநில அரசு வழங்கிய வீட்டில் வசிக்கின்றனர். அகர்தலாவில் உள்ள மற்றவர்களைப் போலவே, முதல்வரின் மனைவி பெரும்பாலும் ரிக்ஷாவில் பயணம் செய்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com