

புதுடெல்லி,
சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளில் பரவியுள்ளது. அவற்றில் டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஒமைக்ரான் என அடுத்தடுத்து புதிய வகை கொரோனா பாதிப்புகளை அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பல நாடுகள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகின்றன. இவற்றில் சீனாவில் தயாரிக்கப்பட்டு வரும் 'சினோபார்ம்' தடுப்பூசி பற்றிய அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இந்த தடுப்பூசி போட்ட 3 மாதங்களில் அதன் செயல்திறனை இழக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் மற்ற கொரோனா தடுப்பூசிகளின் செயல் திறன் குறைய கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகும்.
இலங்கையில் பெரும்பாலான மக்களுக்கு 'சினோபார்ம்' தடுப்பூசி தான் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்நாட்டில் மக்கள் அனைவரும் மூன்று மாதங்களுக்கு பிறகு கட்டாயம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.