முன் விரோதம்: பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் - 3 பேர் கைது

பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.
முன் விரோதம்: பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் - 3 பேர் கைது
Published on

மும்பை,

மும்பை அருகே உள்ள உல்லாஸ்நகரில் கோவிலுக்குள் நுழையும் விவகாரத்தில் பெண் ஒருவரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கி, முடியை வெட்டி, செருப்பு மாலை அணிவித்து, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அந்த பெண்ணின் உறவினர்கள் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் நெருங்கிய உறவினர்கள் ஆவர். அவர்களுக்குள் நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. ஏற்கனவே பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு எதிராக அவரின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை உல்லாஸ்நகர் வித்தல்வாடி பகுதியில் உள்ள கோவிலுக்கு அந்தப் பெண் செல்ல முயன்றுள்ளார். அப்போது, அந்த பெண் தங்களது குலதெய்வங்களை இழிவுபடுத்தி பேசியதாகக்கூறி, அவரை கோவிலுக்குள் நுழைய கூடாது என உறவினர்கள் தடுத்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் உறவினர்கள் அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியதோடு நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ பரவியதை அடுத்து, உல்லாஸ்நகர் சென்டிரல் போலீசார் வழக்குப்ப திவு செய்து உறவினர்களான 3 பேர் மீது கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com