மாந்திரீக பூஜைக்காக நிர்வாணமாக தோன்றிய பெண்; ஆசையை அடக்கமுடியாமல் அத்துமீறிய தலைமை பூசாரி

தங்களுடன் உடலுறவில் ஈடுபட்டால்தான், மாந்திரீக பூஜை நிறைவு பெறும் என்று அர்ச்சகர்கள் மிரட்டியுள்ளனர்.
மாந்திரீக பூஜைக்காக நிர்வாணமாக தோன்றிய பெண்; ஆசையை அடக்கமுடியாமல் அத்துமீறிய தலைமை பூசாரி
Published on

பெங்களூரு,

பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 38 வயது பெண் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டார். இதன் காரணமாக 2 குழந்தைகளை வளர்க்கவும், குடும்பத்தை நடத்த முடியாமலும் பெண் சிரமப்பட்டுள்ளார். அப்போது இன்ஸ்டாகிராமில் கேரளாவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று மாந்திரீக பூஜை செய்தால், குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும் என்று வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது.

இதனை நம்பிய அவரும், கேரள மாநிலத்தில் உள்ள கோவிலுக்கு பூஜை செய்வதற்காக சென்றார். அங்கிருந்த அர்ச்சகரான அருணுடன், பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது உங்களுக்கும், உங்களது குழந்தைகளுக்கும் பில்லி, சூனியம் செய்யப்பட்டுள்ளது, இதற்காக மாந்திரீக பூஜை செய்ய வேண்டும், அதற்கு ரூ.24 ஆயிரம் செலவாகும் என்று பெண்ணிடம் அர்ச்சகர் அருண் கூறியுள்ளார். பின்னர் அருணிடம் தனது செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு அவர் பெங்களூருவுக்கு வந்து விட்டார்.

அதன்பிறகு, தினமும் இரவில் பெண்ணின் வாட்ஸ்-அப்புக்கு வீடியோ அழைப்பில் அருண் தொடர்பு கொண்டார். அப்போது மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என்றால், நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று கூறி வற்புறுத்தி உள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். இதனால் அர்ச்சகர் அருண், நான் சொல்வது போல் செய்யாவிட்டால் உங்கள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மிரட்டியுள்ளார். இதனால் வேறு வழியின்றி மாந்திரீக பூஜைக்காக அந்த பெண்ணும் நிர்வாணமாக தோன்றியதாக தெரிகிறது.

அந்த பெண் நிர்வாணமாக வீடியோ அழைப்பில் தோன்றியதை தனது செல்போனில் வீடியோவாக அருண் பதிவு செய்து கொண்டார். அந்த பெண்ணை அடைந்தே தீர வேண்டும் என்று பூசாரி அருண் திட்டமிட்டார். அதன்பிறகு, தான் ஒரு பூசாரி என்பதை மறந்து ஆசையை அடக்கமுடியாமல் குடும்ப பிரச்சினையை தீர்க்க சிறப்பு பூஜை செய்ய கேரளாவுக்கு வரும்படி அந்த பெண்ணை அருண் வற்புறுத்தியுள்ளார். அதன்படி, அந்த பெண்ணும் கேரளாவுக்கு சென்றுள்ளார். கோவிலில் சில பூஜையை செய்துவிட்டு, அந்த பெண்ணை அருண், மற்றொரு அர்ச்சகர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு காரில் அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு வைத்து தங்களுடன் உடலுறவில் ஈடுபட்டால் தான், மாந்திரீக பூஜை நிறைவு பெறும், குழந்தைகளுக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றும் அர்ச்சகர்கள் மிரட்டியுள்ளனர். இதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். ஆனாலும் அந்த பெண்ணை அருண் கற்பழிக்க முயன்றதாக தெரிகிறது. அவர்களிடம் இருந்து அவர் தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கு அருண், மற்றொரு அர்ச்சகர் ஆகியோர் பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு, அவரை அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர்.

இந்த நிலையில், கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த அந்த பெண் நடந்த சம்பவங்கள் குறித்து பெல்லந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், மாந்திரீக பூஜை செய்யாவிட்டால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து என கூறி நிர்வாண வீடியோ எடுத்ததுடன், அந்த வீடியோவை காண்பித்து கேரளாவை சேர்ந்த அர்ச்சகர்களான அருண் மற்றும் தலைமை அர்ச்சகரான உன்னி தாமோதரன் தன்னை கற்பழிக்க முயன்றதாக பெண் கூறி இருந்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் விதவையை கற்பழிக்க முயன்றதாக அர்ச்சகர் அருணை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள உன்னி தாமோதரனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com