இரவு உணவுக்கு சப்பாத்தி கேட்ட கணவரை கத்தியால் குத்திய இளம்பெண் - அதிர்ச்சி சம்பவம்

சஞ்சய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இரவு உணவுக்கு சப்பாத்தி கேட்ட கணவரை கத்தியால் குத்திய இளம்பெண் - அதிர்ச்சி சம்பவம்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் மகாவீர் அஹ்ரா கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் குமார் (வயது 28). இவரது மனைவி தேவி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், வீட்டில் கோதுமை மாவு இல்லாததால் நேற்று இரவு பருப்பு வகை உணவை தேவி சமைத்துள்ளார். இரவு பணியை முடித்து வீட்டிற்கு வந்த சஞ்சய் சப்பாத்தி செய்துதருமாறு கேட்டுள்ளார். இதற்கு தேவி மறுத்துள்ளார். இதனால், கணவன் , மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தேவி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து சஞ்சயை சரமாரியாக குத்தினார். இதில் சஞ்சய் அலறி துடித்து சரிந்து விழுந்தார்.

சஞ்சயின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சஞ்சய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com