

ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் தேவி (வயது 25. இவருக்கு திருமணமாகி பிஹி என்ற மகள் இருந்தார்.
இந்நிலையில், தேவியின் மகள் பிஹிக்கு கடந்த 2ம் தேதி பிறந்தநாள் ஆகும். மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக தேவிக்கும் அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மன உளைச்சல் அடைந்த தேவி நேற்று இரவு ஊருக்கு அருகே உள்ள கிணற்றில் மகளுடன் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.