மதம் மாற கள்ளக்காதலன் வற்புறுத்தியதால் பெண் தற்கொலை

மதம் மாறவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக கள்ளக்காதலன் மிரட்டி உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ராமதுர்கா தாலுகா கோனகனூர் கிராமத்தை சேர்ந்தவர் தேமப்பா. இவரது மனைவி நாகவ்யா வந்தமுரி (28). இந்த நிலையில் நாகவ்யாவுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த மெகபூப் சாப் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இதனை அறிந்த தேமப்பா, மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் நாகவ்யா கள்ளக்காதலை கைவிடவில்லை. இதையடுத்து கணவரை பிடித்து கள்ளக்காதலன் மெகபூப் சாப்புடன் நாகவ்யா சென்றுவிட்டார். அவர்கள் ராமதுர்கா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் மெகபூப் சாப், மதம் மாறும்படி கூறி நாகவ்யாவை தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
மேலும் மதம் மாறவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தினமும் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த நாகவ்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ராமதுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






