வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பத்ராவதியில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா வினோபாநகர் கள்ளஹள்ளியை சேர்ந்தவர் சுமிதா (வயது 36). இவருக்கும் ஜன்னாபுராவை சேர்ந்த நாகேந்திரா என்பவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் முடிந்தது. தற்போது தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கு இடையே வரதட்சணை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கு மாமனார், மாமியார் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் மனம் நொந்த சுமிதா, வீட்டின் பின்புறம் இருந்த மாட்டு தொழுவதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பத்ராவதி புறநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது வரதட்சணை கொடும காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பத்ராவதி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com