நிழற்குடை இடிந்து தாய்-மகள் பலி

உத்தரபிரதேசத்தில் நிழற்குடை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி தாய்-மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் பரூக்காபாத்தை சேர்ந்தவர் ரூபி (வயது 35). இவருக்கு குஷ்பூ என்ற 2 வயது பெண் குழந்தை ஒன்று இருந்தது. தன் குழந்தையுடன் ரூபி அம்ரித்பூர் பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். இந்தநிலையில் கடுமையான வெயில்தாக்கத்தை தாங்கமுடியாமல் சாலையோரத்தில் இருந்த நிழற்குடையில் உட்கார்ந்தனர்.

அப்போது அதே சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிழற்குடை மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால் நிழற்குடை இடிந்து விழுந்து நொறுங்கியது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி தாய்-மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி செத்தனர். தப்பி ஓடிய ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com