வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தவர்கள் மீது மோதிய கார்; தாய்-மகள் பலி

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தவர்கள் மீது மோதிய கார்; தாய்-மகள் பலி
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் ஜனதுன் நிஷா (வயது 44). இவரது மகள் ஜகீனா (வயது 16). இந்நிலையில், நிஷா, ஜகீனா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் நேற்று இரவு 10 மணியளவின் வீட்டில் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, வீடு அமைந்துள்ள தெருவில் உள்ள சாலையில் கார் வேகமாக வந்தது. அந்த கார் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தவர்கள் மீது அதிவேகமாக மோதியது. இந்த சம்பவத்தில் நிஷா அவரது மகள் ஜகீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், குடும்பத்தினர் 5 பேர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஒருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com