பழச்சாறு குடித்த பெண் திடீர் சாவு

பழச்சாறு குடித்த பெண் திடீரென பலியான சம்பவம் நடந்துள்ளது.
பழச்சாறு குடித்த பெண் திடீர் சாவு
Published on

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே சேனி பகுதியை சேர்ந்தவர் லீலாவதி (வயது 35). இவர் வீட்டில் இருந்த ஒரு பழத்தை எடுத்து பழச்சாறு போட்டு குடித்துள்ளார். இந்த நிலையில் அந்த பழச்சாறை குடித்த சில மணி நேரத்தில் அவருக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், லீலாவதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் லீலாவதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து சுள்ளியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விஷத்தன்மை கொண்ட பழத்தை அவர் பழச்சாறு போட்டு குடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com