துணி துவைத்து கொண்டிருந்தபோது தலையில் பலாப்பழம் விழுந்து பெண் உயிரிழப்பு

கேரளாவில் துணி துவைத்து கொண்டிருந்தபோது தலையில் பலாப்பழம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள திருச்சிலிங்காடி பகுதியை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவருடைய மனைவி மினி (53 வயது). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு நின்று துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது அருகே உள்ள பலா மரத்தில் இருந்து பலாப்பழம் திடீரென அவரது தலையில் விழுந்தது.

இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மினி இறந்தார். இதுகுறித்து கோழிக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com