பெண் டாக்டர் கொலை வழக்கு: மேற்கு வங்காள அரசு மேல்முறையீடு

குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது
பெண் டாக்டர் கொலை வழக்கு: மேற்கு வங்காள அரசு மேல்முறையீடு
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில், பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு, ஆயுள் தண்டனை விதித்து சியல்டா கோர்ட்டு உத்தரவிட்டது.சஞ்சய் ராய் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

மேலும், 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி அனிர்பன் தாஸ் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் வழங்க மேற்கு வங்காள அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்தநிலையில், பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து மேற்கு வங்க அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது . குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட்டில் மேற்கு வங்காள அரசு மேல்முறையீடு செய்துள்ளது .

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com