வரதட்சணை கொடுமை: இளம்பெண்ணை ஆசிட் குடிக்கவைத்து கொன்ற கணவன் குடும்பத்தினர் - அதிர்ச்சி சம்பவம்


வரதட்சணை கொடுமை: இளம்பெண்ணை ஆசிட் குடிக்கவைத்து கொன்ற கணவன் குடும்பத்தினர் - அதிர்ச்சி சம்பவம்
x

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் கலா ஹிடா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் குல் பைசா. இவருக்கும் அமொர்கா பகுதியை சேர்ந்த பர்வேஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. குல் பைசா தனது கணவர் பர்வேஷ் வீட்டில் வாழ்ந்து வந்தார்.

இதனிடையே, திருமணத்திற்குப்பின் கூடுதல் வரதட்சணை கேட்டு பர்வேஷ் மற்றும் அவரது தாய், தந்தை, உறவினர்கள் குல் பைசாவுக்கு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி கூடுதல் வரதட்சணை கேட்டு குல் பைசாவை பர்வேசும் அவரது குடும்பத்தினரும் தாக்கியுள்ளனர். மேலும், ஆத்திரம் அடங்காத பர்வேசின் குடும்பத்தினர் வீட்டில் இருந்த ஆசிட்டை குல் பைசாவின் வாயில் ஊற்றி வலுக்கட்டாயமாக அதை குடிக்க வைத்துள்ளனர். ஆசிட் குடித்ததில் படுகாயமடைந்த குல் பைசா அலறி துடித்த நிலையில் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மொராதாபாத் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குல் பைசாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 17 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குல் பைசா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story