இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று உடலை எரித்து ஆற்றில் வீசிய கொடூரம்

அஞ்சலிக்கு வலுக்கட்டாயமாக மதுகொடுத்து அவரின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்
இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று உடலை எரித்து ஆற்றில் வீசிய கொடூரம்
Published on

உத்தரபிரதேச மாநிலம் இட்டாவா பகுதியை சேர்ந்த இளம்பெண் அஞ்சலி (வயது 28). கணவனை இழந்த அஞ்சலிக்கு 2 பிள்ளைகள் உள்ளன.

இதனிடையே, அஞ்சலி தான் வசித்துவந்த பகுதியில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். இதற்காக அதேபகுதியை சேர்ந்த சொத்து புரோக்கரான சிவேந்திரா என்பவரிடம் பிளாட் நிலம் வாங்க 6 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.

பணத்தை வாங்கிக்கொண்ட புரோக்கர் சிவேந்திரா நிலத்தின் பத்திரத்தை அஞ்சலியிடம் கொடுக்காமல் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி சிவேந்திராவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், அஞ்சலிக்கும், சிவேந்திராவுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொடுத்த 6 லட்ச ரூபாய் பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ள வருமாறு கடந்த 7ம் தேதி அஞ்சலியிடம் சிவேந்திரா கூறியுள்ளார்.

இதையடுத்து, அன்றைய தினமே ஸ்கூட்டியில் சிவேந்திராவின் வீட்டிற்கு அஞ்சலி சென்றுள்ளார். அப்போது, வீட்டில் வைத்து வாங்கிய பணத்தை திரும்பி தராமல் சிவேந்திரா தனது கூட்டளியுடன் சேர்ந்து அஞ்சலியை தாக்கியுள்ளார்.

பின்னர், அஞ்சலிக்கு வலுக்கட்டாயமாக மதுகொடுத்து அவரின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். உயிரிழந்த அஞ்சலியின் உடலை அப்பகுதியில் பாயும் யமுனை ஆற்றங்க்கரைக்கு சிவேந்திரா கொண்டு சென்றார். அங்குவைத்து அஞ்சலியிடன் உடலை தீ வைத்து எரித்துள்ளார். பின்னர் பாதி எரிந்த நிலையில் அஞ்சலியின் உடலை யமுனை ஆற்றில் வீசியுள்ளார். மேலும், அஞ்சலியின் ஸ்கூட்டியையும் தீ வைத்து எரிந்துள்ளனர்.

சிவேந்திராவை பார்க்க செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி அன்று இரவுக்குள் வீடு திரும்பி வராதது குறித்து அஞ்சலியின் சகோதரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து மறுநாள் அவர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவேந்திராவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சொத்து பிரச்சினையில் அஞ்சலிக்கு மதுபானம் கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை எரித்து யமுனை ஆற்றில் வீசிவிட்டதாக சிவேந்திரா கூறினார். இதையடுத்து, சிவேந்திராவையும் , அவருக்கு உடந்தையாக இருந்த கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர். ஆற்றில் வீசப்பட்ட அஞ்சலியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com