பீகார்: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார்: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
Published on

பாட்னா,

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் கர்னேம்பூர் கிராமத்தை சேர்ந்த 19வயது இளம்பெண்ணுக்கு அதேகிராமத்தை சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி அந்த இளைஞரின் வீட்டிற்கு இளம்பெண் சென்றுள்ளார். அங்கு சென்ற இளம்பெண்ணை இளைஞரும் அவரது நண்பர்களும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையடுத்து அந்த கும்பலிடமிருந்து தப்பிய இளம்பெண் நடந்த சம்பவம் குறித்து தனது வீட்டில் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com