உ.பி.யில் பயங்கரம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிப்பு

உத்தரபிரதேசத்தில் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
உ.பி.யில் பயங்கரம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிப்பு
Published on

லக்னோ,

ஷாபால் மாவட்டம் குன்னார் பகுதியில் பெண், 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஜூலை 13-ம் தேதி பெண் தன்னுடைய மகளுடன் வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு கும்பல் வீட்டிற்குள் புகுந்து உள்ளது. அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அவரை அக்கும்பல் அருகே இருந்த குடிசைக்கு கொண்டு சென்று, உயிருடன் எரித்துள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அராம் சிங், மகாவீர், சரண் சிங், குலு மற்றும் போனா ஆகிய 5 பேருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளோம் என போலீஸ் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலம் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, குற்றவாளிகளை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காசியாபாத் பகுதியில் பணி செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com