கழுத்தை நெரித்து பெண் கொலை

மகளிர் சுயஉதவி குழுவில் பணம் வாங்கி வர மறுத்ததால் கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்டா.கணவரை போலீசா வலைவீசி தேடிவருகின்றனா.
கழுத்தை நெரித்து பெண் கொலை
Published on

நஞ்சன்கூடு

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா கெஸ்தூர் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரூபா (வயது 35). இந்த தம்பதிக்கு 5 வயதில் அன்விதா என்ற மகள் உள்ளாள்.

இந்த நிலையில், ரூபாவிடம் வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு புருஷோத்தமன் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் மகளிர் சுயஉதவி குழுவில் ரூ.1 லட்சம் கடன் பெற்று கொடுக்கும்படியும் ரூபாவை அவர் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அவரை உடல் ரீதியாகவும் புருஷோத்தமன் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்றும் மனைவி ரூபாவிடம் மகளிர் சுயஉதவி குழுவில் பணம் வாங்கி வரும்படி புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். இதற்கு ரூபா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புருஷாத்தமன், ரூபாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து புருஷோத்தமன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து நஞ்சன்கூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com