தாவணகெரேவில் கணவனை கொலை செய்த பெண், காதலனுடன் கைது

தாவணகெரேவில் கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண், கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
தாவணகெரேவில் கணவனை கொலை செய்த பெண், காதலனுடன் கைது
Published on

சிக்கமகளூரு:-

கள்ளக்காதல் விவகாரம்

தாவணகெரே மாவட்டம் பழைய பிஸ்லேரி கிராமத்தை சோந்தவர் லிங்கராஜ் (வயது 24). இவரது மனைவி காவியா (22). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேருக்கும் திருமணம் முடிந்தது. குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் திருமணத்திற்கு முன்பு காவியா, அதே பகுதியை சேர்ந்த பீரேஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் காதலாக மாறியது.

இதை குடும்பத்தினர் அறிந்து, காவியாவை, லிங்கராஜிற்கு திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவியா, பீரேஷ் மீண்டும் தங்களது காதலை தொடர்ந்தனர். இதனால் அடிக்கடி லிங்கராஜ் இல்லாதபோது, காவியா மற்றும் பீரேஷ் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இது லிங்கராஜிற்கு தெரியவந்ததும், அவர் காவியா மற்றும் பீரேஷை கண்டித்தார்.

கள்ளக்காதலனுடன் ஓட்டம்

இருப்பினும் அவர்கள் கேட்கவில்லை. தங்களின் கள்ளக்காதலை தொடர்ந்தனர். இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காவியாவும், பீரேசும் வீட்டிற்கு தெரியாமல் ஓடி விட்டனர். 2 பேரும் மங்களூருவில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த குடும்பத்தினர் மங்களூரு சென்று 2 பேரையும் சிக்கமகளூருவிற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை பிரித்து, காவியாவை மீண்டும் லிங்கராஜூடன் சேர்த்து வைத்தனர். ஆனால் காவியா, பீரேசால் கள்ளக்காதலை கைவிட முடியவில்லை. இருவரும் மீண்டும் சந்திக்க முயற்சித்தனர்.

ஆனால் அதற்கு லிங்கராஜ் தடையாக இருந்ததால் முடியாமல் போனது. இதனால் காவியா, பீரேஷ் ஆகிய 2 பேரும் சேர்ந்து, லிங்கராஜை கொலை செய்ய திட்டமிட்டனர். இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி லிங்கராஜ் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த மனைவி காவியா, உறவினர்களுக்கு தகவல் அளித்தார். அவர்கள் வந்து விசாரித்தபோது, கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு லிங்கராஜ் இறந்ததாக கூறினார். இதையடுத்து உறவினர்கள் லிங்கராஜின் உடலை கைப்பற்றி அடக்கம் செய்தனர்.

கணவனை கொன்ற மனைவி

இந்தநிலையில் லிங்கராஜின் தாயாராக்கு இந்த சாவில் சந்தேகம் எழுந்தது. அவர் உடனே தாவணகெரே போலீசில் இது குறித்து புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது, காவியாவின் மீது சந்தேகம் எழுந்தது. காவியை மடக்கிய போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்ததால், காதலனுடன் சேர்ந்து, கணவனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததாக கூறினார்.

இதையடுத்து காவியா மற்றும் அவரது கள்ளக்காதலன் பீரேஷை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள தாவணகெரே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com