துப்பாக்கி சூட்டில் பெண் பலி: பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு 4 ஆண்டுகள் சிறை

பதேபூர் பெரியில் பண்ணைவீட்டில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் சாஹேப்கஞ்ச் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து பெண் ஒருவர் பலியானார்.
சிறை தண்டனை
Published on

புதுடெல்லி,

பீகாரில் நடந்த புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் பா.ஜனதா எம்.எல்.ஏ. துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து பெண் ஒருவர் பலியானது தொடர்பான வழக்கில் அந்த எம்.எல்.ஏ.வுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்ட விழா

பீகாரில் சாஹேப்கஞ்ச் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜுகுமார்சிங். கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி இரவு பதேபூர் பெரியில் பண்ணைவீட்டில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் அவர் பங்கெடுத்தார்.

துப்பாக்கி சூட்டில் பெண் பலி

அப்போது அவர் கொண்டாட்ட மனநிலையில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து விருந்தினராக கலந்து கொண்ட அர்ச்சனா குப்தா என்ற பெண் இறந்தார்.

4 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கில் ராஜுகுமார்சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். டெல்லி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "சட்டத்தின் ஆட்சி நடைபெறும் ஒரு மாநிலத்தில் நமக்கு 'சிங்கம்' அல்லது 'புஷ்பா' போன்றவர்கள் தேவையில்லை” என்று குறிப்பிட்ட நீதிபதி, ராஜுகுமார்சிங்குக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்தார். அபராத தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com