மகள் போட்ட டீயை குடித்த தந்தை, கணவர், 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

தவறுதலாக பூச்சி மருந்து கலந்து பெண் போட்ட டீயை குடித்த தந்தை, கணவர், இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகள் போட்ட டீயை குடித்த தந்தை, கணவர், 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
Published on

மெயின்புரி

உத்தரபிரதேசம் மெயின்புரி நாக்லா கன்ஹாய் கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தன் (35) இவரது மனைவி ராமமூர்த்தி. சிவானந்தனின் மனைவியின் தந்தை ரவீந்திரன் காலையில் அவரது வீட்டிற்கு வந்து உள்ளார். மகள் ராம்மூர்த்தி அனைவருக்கும் டீ தயாரித்து கொடுத்தார். அதே நேரத்தில் பக்கத்து வீட்டு சோப்ரனும் வந்து உள்ளார். மகள் ஷிவாங் மற்றும் மகன் திவ்யான்ஷ் உள்பட் 5 பேருக்கு டீ கொடுக்கபட்டு உள்ளது.

டீயை குடித்த சில நிமிடங்களுலில் ஐந்து பேர் ஒருவர் பின் ஒருவராக சுயநினைவை இழக்கத் தொடங்கினர். உடனடியாக அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர்கள் ரவீந்திரன், ஷிவாங் மற்றும் திவ்யான்ஷ் இறந்துவிட்டதாக அறிவித்தனர், சோப்ரனும் சிவானந்தனும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சிவானந்தனின் மனைவி ராமமூர்த்தியிடம் நடத்திய விசாரணையில், நெல் பயிருக்கு தெளிக்கப்படும் பூச்சி கொல்லி மருந்தை தேயிலை இலை என்று தவறாகக் கருதி டீ போட பயனபடுத்தியதாக கூறி உள்ளார். இது குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com