

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ராமபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விசரஜத் (வயது 22). இவருக்கு பீகாரைச் சேர்ந்த அமினா கட்டுன் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நெருக்கமாக பழகி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அமினா, டெல்லி வஜிராபாத் பகுதியில் வசித்து வருகிறார்.
கடந்த 24-ந்தேதி உல்லாசமாக இருக்கலாம் என காதலி அழைத்துள்ளார். காதலியைப் பார்க்க ஆசை ஆசையாய் விசர்ஜீத் டெல்லி வந்தார். அன்று இருவரும் வஜிராபாத்தில் ஒன்றாக தங்கியிருந்தனர். அப்போதுதான் அந்த இடி போன்ற செய்தி அமினாவுக்கு தெரியவந்தது. தனது காதலன் விசர்ஜீத்துக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதையும், அந்த உண்மையை மறைத்து தன்னை இரண்டு வருடமாக ஏமாற்றி வந்ததையும் அவர் அறிந்தார்.
தன்னை ஏமாற்றிய காதலனை சும்மா விடக்கூடாது என்று கருதிய அமினா அவரை பழிவாங்க முடிவு செய்தார். நாம் இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என கூறி காதலிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளார். அவரும் சரி என்று ஒத்துக்கொண்டு வீட்டில் தங்கி உள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட காதலி, இதனை தொடர்ந்து இரவு விசர்ஜீத்துக்கு மயக்க மருந்து கலந்த பால் கொடுத்துள்ளார். ஆனால், இதை அறியாத விசர்ஜீத் அதை அப்படியே மடக் மடக்கென குடித்தார். பின்னர் அவர் மயங்கி விட்டார். நள்ளிரவு 2.30 மணியளவில் அவர் அரை மயக்கத்தில் இருந்த நேரம் பார்த்து, அமினா தனது கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் விசர்ஜீத்தின் மர்ம உறுப்பை அறுத்து சிதைத்துள்ளார்.
இதனால் வலியால் அலறிய விசர்ஜீத், ரத்த வெள்ளத்தில் துடித்தார். இதையடுத்து காதலி அமினா அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் துடித்த நிலையிலும் விசர்ஜீத் தானாகவே ஆஸ்பத்திரிக்குச் சென்று சிகிச்சைக்கு சேர்ந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மற் றொரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், விசர்ஜீத்தின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான காதலி அமினாவை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கி டையே விசர்ஜீத் போலி டாக்டராக செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.