

லக்னோ,
இறந்துவிட்டதாகக் கருதி குடும்பத்தினரால் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட பெண் ஒருவர் 27 மாதங்களுக்கு பிறகு உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதான சிவானி.இவர் கடந்த 2024-ம் ஆண்டு மே 2-ம் தேதி காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதே ஆண்டு ஜூலை 16-ம் தேதி அங்குள்ள ஒரு உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத நிலையில் அழுகிய உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
உடலின் கையில் கட்டப்பட்டிருந்த கயிறு மற்றும் விரலில் இருந்த மோதிரம் உள்ளிட்ட அடையாளங்களின் அடிப்படையில், அந்த உடல் சிவானியுடையது என அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டனர். பின்னர் அந்த உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், காணாமல் போனதாக கருதப்பட்ட சிவானி 27 மாதங்களுக்கு பிறகு கடந்த சனிக்கிழமை தனது பெற்றோர் வீட்டுக்கு திரும்பினார். அவர் லக்னோவின் பாரா பகுதியில் ஜாவேத் என்பவருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
சிவானி உயிருடன் திரும்பியுள்ளதால், அவரது பெயரில் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட அந்த உடல் யாருடையது? என்ற மிகப்பெரிய தற்போது எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.