55 வயது பெண்ணை சுட்டுக்கொன்ற மகளின் முன்னாள் காதலன் - போலீசார் விசாரணை

டெல்லியில் 55 வயது பெண் ஒருவரை அவரது மகளின் முன்னாள் காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

வடக்கு டெல்லியின் சராய் ரோஹில்லா பகுதியில் 55 வயது பெண் ஒருவரை அவரது மகளின் முன்னாள் காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது பூனம் (வயது 55) சுட்டுக் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மகளின் முன்னாள் காதலன் அங்கித் கவுசிக் அவரை கொன்றதாக சந்தேகிக்கப்படுவதாக துணை போலீஸ் கமிஷனர் சாகர் சிங் கல்சி கூறினார்.

இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com