

சிவமொக்கா:
காபித்தோட்ட தொழிலாளி தம்பதி
சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா நள்ளிகொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிக் நாயக். இவரது மனைவி மஞ்சுளா(வயது 37). காபித்தோட்ட தெழிலாளியான இவர்கள், சிக்கமகளூரு மாவட்டம் பாலேஒன்னூரில் உள்ள காபி தோட்டத்தில் வலை பார்த்து வந்தனர். இதில் மல்லிக் நாயக், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.
இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி தம்பதியினர் சொந்த கிராமமான நள்ளிகொப்பா கிராமத்திற்கு வந்துள்ளனர். பின்னர் காபித்தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல இருந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதியம் மதுகுடிப்பதற்காக மல்லிக் நாயக் வீட்டில் இருந்த சட்டையை எடுத்து போட்டு கொண்டு வெளியே சென்றுள்ளார்.
பெண் கொலை
இந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் மல்லிக் நாயக்கின் சட்டைப்பையில் இருந்த 500 ரூபாய் நோட்டு கீழ விழுந்துள்ளது. இதனை கவனித்த மஞ்சுளா, மல்லிக் நாயக்கிற்கு தெரியாமல் அந்த 500 ரூபாய் நோட்டை எடுத்து பத்திரப்படுத்தி வைத்து உள்ளார்.
இதற்கிடையே மதுபானக்கடைக்கு சென்ற மல்லிக்நாயக், தனது சட்டப்பையில் இருந்த 500 ரூபாய் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தான் வந்த வழியே 500 ரூபாய் நோட்டை தேடிப்பார்த்துள்ளார். ஆனாலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மல்லிக் நாயக் வீட்டிற்கு வந்து மனைவி மஞ்சுளாவிடம் 500 ரூபாய் பற்றி கேட்டுள்ளார்.
அப்போது கணவர் மல்லிக் நாயக்கிடம், மஞ்சுளா முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த மல்லிக்நாயக், மஞ்சுளாவை அடித்து, உதைத்து கேட்டுள்ளார். அப்போது மஞ்சுளா 500 ரூபாயை நான் தான் எடுத்தேன் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மல்லிக்நாயக், மஞ்சுளாவை சரமாரியாக அடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார். பின்னர் தனது காலால், மஞ்சுளா கழுத்தை மிதித்து நரித்து உள்ளார். இதனால் மஞ்சுளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
கணவன் கைது
இதையறிந்த அப்பகுதியினர், சிகாரிப்புரா புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் கொலையான மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், குடிப்பதற்காக வைத்து இருந்த 500 ரூபாயை எடுத்த ஆத்திரத்தில் மனைவியே, மல்லிக்நாயக் கென்றது தெரியவந்தது.
இதில் மஞ்சுளாவும், கணவனுடன் சேர்ந்து மது அருந்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மல்லிக்நாயக்கை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சிகாரிப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.