கள்ளக்காதலனுடன் உல்லாசம்... இடையூறாக இருந்த கணவர்... மனைவி செய்த கொடூர செயல்


கள்ளக்காதலனுடன் உல்லாசம்... இடையூறாக இருந்த கணவர்... மனைவி செய்த கொடூர செயல்
x

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

பெங்களூரு,

கரநாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகா பால்யா கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப். இவரது மனைவி தாக்ஷாயினி. இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தாக்ஷாயினிக்கும், அதேப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதல் மாறியது.

இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இருவரின் கள்ளக்காதல் விவகாரம் பற்றி அறிந்த பிரதாப், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய தாக்ஷாயினி முடிவு செய்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதாப்புக்கு உணவில் விஷம் கலந்துகொடுத்து கொல்ல முயன்றுள்ளார். இதனை பிரதாப் கண்டுப்பிடித்து விட்டார். அதிர்ஷ்டவசமாக அந்த உணவை சாப்பிடாததால் அவர் உயிர் தப்பினார். இதுகுறித்து அவர், ஆலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story