கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்.. கண்டித்த கணவனை கொல்ல முயன்ற பெண்.. அடுத்து நடந்த பரபரப்பு


கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்.. கண்டித்த கணவனை கொல்ல முயன்ற பெண்.. அடுத்து நடந்த பரபரப்பு
x
தினத்தந்தி 10 Sept 2025 1:40 PM IST (Updated: 10 Sept 2025 2:18 PM IST)
t-max-icont-min-icon

இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவான கள்ளக்காதலன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜயாப்புரா,

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் இண்டி டவுன் அக்கமகாதேவி நகரில் வசித்து வருபவர் பீரப்பா மாயப்பா பூஜாரி. இவரது மனைவி சுனந்தா. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் சுனந்தாவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சித்தப்பா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதுபற்றி அறிந்த பீரப்பா, தனது மனைவியை கண்டித்தார்.

இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கொலை செய்திட சுனந்தா முடிவு செய்தார். கடந்த 1-ந் தேதி அன்று இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு படுத்து பீரப்பா தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து நள்ளிரவில் சுனந்தா, தனது கள்ளக்காதலன் சித்தப்பாவை செல்போனில் அழைத்து வீட்டுக்கு வரவழைத்தார்.

அதன்பேரில் அவர் தனது நண்பருடன் சுனந்தாவின் வீட்டுக்கு சென்றார். பின்னர் சுனந்தா, சித்தப்பா, அவரது நண்பர் ஆகிய 3 பேரும் சேர்ந்து பீரப்பாவை கழுத்தையும், மர்ம உறுப்பையும் மிதித்து கொல்ல முயன்றனர். அப்போது பீரப்பா காலால் சுனந்தாவை எட்டி உதைத்து, கூச்சலிடவே வீட்டின் உரிமையாளர் சத்தம் கேட்டு ஓடி வந்துள்ளார்.

அவர் வீட்டின் கதவை தட்ட, தூங்கிக் கொண்டிருந்த பீரப்பாவின் 8 வயது மகன் கண்விழித்து கதவை திறந்துள்ளான். அவர் வீட்டுக்குள் நுழைய, சித்தப்பாவும், அவரது நண்பரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் பீரப்பா உயிர் பிழைத்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாமதமாக வெளிச்சத்திற்கு வந்த இச்சம்பவம் பற்றி இண்டி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனந்தாவை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இக்கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் சுனந்தாவின் கள்ளக்காதலன் சித்தப்பா சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் இந்த கொலை சம்பவத்தை முழுக்க, முழுக்க சுனந்தா மட்டுமே திட்டமிட்டு அரங்கேற்றியதாகவும், அவர் அழைத்ததன் காரணமாக தான் தன்னுடைய நண்பனுடன் அங்கு சென்றதாகவும் சித்தப்பா கூறியுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் சுனந்தாவின் அண்ணன், கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனால் அவர்களையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story