ஷ்ரத்தா வாக்கருக்கு நீதி கேட்டு கூட்டம் ; ஆணை செருப்பால் தாக்கிய பெண்

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, அதில் ஒரு பெண், நீல நிற துப்பட்டவால் முகத்தை பாதி மூடிய நிலையில் உரையாற்றுவதைக் காணலாம்.
ஷ்ரத்தா வாக்கருக்கு நீதி கேட்டு கூட்டம் ; ஆணை செருப்பால் தாக்கிய பெண்
Published on

புதுடெல்லி

தெற்கு டெல்லியின் சத்தர்பூரில் உள்ள இந்து ஏக்தா மஞ்ச் என்ற இடத்தில் ஷ்ரத்தா வாக்கருக்கு நீதி கேட்டு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த ஒரு பெண், அருகில் நின்று இருந்த நபர் ஒருவரௌ செருப்பால் தாக்குகிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, அதில் ஒரு பெண், நீல நிற துப்பட்டவால் முகத்தை பாதி மூடிய நிலையில் உரையாற்றுவதைக் காணலாம்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, அவள் திடீரென்று தன் செருப்பை எடுத்து, தன் அருகில் நின்றவரத் தாக்கத் தொடங்குகிறார்.ஆனால் மேடையில் இருந்த மற்றவர்கள் தலையிட்டு, அந்த பெண்ணை மேடையில் இருந்து இறக்கினர்.

அடிவாங்கிய நபரின் மகனுடன் பெண்ணின் மகள் தப்பிச் சென்றுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இருவருக்கும் திருமணம் கூட நடந்து விட்டது.இதைப் பற்றி அந்தப் பெண் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். இதற்கிடையில், அவர் கோபமடைந்து, அந்த நபரை செருப்பை எடுத்து அடிக்க ஆரம்பித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தங்களுக்கு புகார் எதுவும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com