சிவமொக்கா ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

சிவமொக்கா தனியார் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் ஒரு பெண் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தாயும், சேய்களும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவமொக்கா ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்
Published on

சிவமொக்கா:

நிறைமாத கர்ப்பிணி

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா தடசா கிராமத்தை சேர்ந்தவர் ஆரிஸ். இவருடைய மனைவி அல்மாஜ் பானு. கர்ப்பமாக இருந்த அவர், திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அல்மாஜ் பானுவுக்கு நேற்று அதிகாலை திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து அல்மாஜ் பானுவை அவரது குடும்பத்தினர் திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

4 குழந்தைகள் பிறந்தன

அப்போது அவருக்கு திடீரென்று ரத்தபோக்கு ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர்.இதையடுத்து அல்மாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது வயிற்றுக்குள் 4 குழந்தைகள் இருந்தன. இதனால் டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து 4 குழந்தைகளையும் வெளியே எடுத்தனர். பின்னர் அந்த குழந்தைகளுக்கும், அல்மாஜிக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது தாயும், 4 சேய்களும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 2 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், 4 குழந்தைகளும் முறையே 1.100 கிலோ, 1.200 கிலோ, 1.300 கிலோ, 1.800 கிலோ எடை இருப்பதாகவும், அந்த குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். சிவமொக்கா தனியார் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com