வருங்கால கணவரை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற பெண் - காதலனுடன் கைது

சியா கோயலுக்கு கேதன் விஷாலை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.
வருங்கால கணவரை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற பெண் - காதலனுடன் கைது
Published on

புனே,

புனேயில் மலையேற்றம் சென்ற 26 வயது ரியல் எஸ்டேட் அதிபர் 400 அடி பள்ளத்தில் விழுந்து பலியான சம்பவத்தில் பரபரப்பு திருப்பம் ஏற் பட்டுள்ளது. அவர் தனது வருங்கால மனைவி மற்றும் காதலனால் கீழே தள்ளி கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது.

திருமண நிச்சயம்

மராட்டிய மாநிலம், புனேயில் உள்ள ககுஞ்சே பகுதியைச்சேர்ந்தவர் கேதன் விஷால் அகர்வால்(வயது 26). இவர் தனது குடும்பத்தினர் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். கேதன் விஷாலுக்கும், சியா கோயல் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக் கப்பட்டு இருந்தது.

இவர்களுக்கு வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருந்தது.

இந்தநிலையில் சியா கோயலின் பிறந்தநாளை கொண்டாட புனே மாவட்டம் லோனாவாலா பகுதியில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற லோகா காட் கோட்டை மலைப்பகுதிக்கு வருமாறு தனது வருங்கால கணவர் கேதன் விஷாலுக்கு அழைப்பு விடுத்தார்.

தனது வருங்கால மனைவி பிறந்தநாளை கொண்டாட கடந்த 18-ந்தேதி கேதன் விஷால் அங்கு சென்றார். அங்கு அவர்கள் கரம் கோர்த்து ஜோடியாக மலையேற்றம் சென்றனர். பின்னர் இந்த ஜோடியுடன் நண்பர் ஒருவரும் சேர்ந்து கொண்டார்.

அவர்கள் மலையின் செங்குத்தான பாறையில் நின்று புகைப்படம் எடுத்தனர். இதில் கேதன் விஷால் நிலை தடுமாறி 400 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். வருங்கால மனைவி கண்முன்னே நடந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. போலீ சார் இதுகுறித்து விபத்து வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

கொலை செய்யப்பட்டது அம்பலம்

இருப்பினும் விசாரணையின்போது சியா கோயலின் வாக்குமூலம் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியது. இதனால் போலீசாரும் தங்களது விசாரணையை வேறு கோணங்களில் தொடங்கினர்.

அப்போது சியா கோயல், சேத்தன் சவுத்ரி(22) என்ற வாலிபரை காதலித்து வந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அந்த வாலிபரை தங்களது காவலில் எடுத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. சியா கோயலும், காதலன் சேத்தன் சவுத்திரியும் சேர்ந்து கேதன் விஷாலை மலையில் இருந்து கீழே தள்ளி கொன்றது தெரியவந்தது.

காதலுக்கு இடையூறாக...

சியா கோயலுக்கு கேதன் விஷாலை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. இதனால் அவர் தனது காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதினார். எனவே காதலர்களும் இருவரும் சதித்திட்டம் தீட்டி, வருங் கால கணவரை தீர்த்து கட்டியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பே ரில் போலீசார் வழக்குப்பதிந்து சியா கோயல் மற்றும் அவரது காதலனை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com