உத்தரபிரதேசம்: சூட்கேசுக்குள் பெண்ணின் உடல் கண்டெடுப்பு


உத்தரபிரதேசம்: சூட்கேசுக்குள் பெண்ணின் உடல் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 10 March 2025 2:00 AM IST (Updated: 10 March 2025 3:44 AM IST)
t-max-icont-min-icon

சூட்கேசுக்குள் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் உள்ள பவுகேதா கிராமத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமாக ஒரு சூட்கேஸ் இருப்பதை அங்குள்ள மக்கள் கண்டனர். இந்த சூட்கேஸ் வயல் பகுதியில் கிடந்தது. இதனைக்கண்டவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த சூட்கேசை மீட்டனர். அதனை திறந்து பார்த்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி, அதில் ஒரு பெண்ணின் உடல் இருந்தது. பின்னர் அந்த உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவர் யார் என இன்னும் அடையாளம் காணப்பட வில்லை.பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story