புதுச்சேரி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: முதல் மந்திரி ரங்கசாமி

அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல் மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: முதல் மந்திரி ரங்கசாமி
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல் மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து அனைத்து பெண்களும் புதுச்சேரி அரசு பேருந்தில் இலவச பயணம் செய்யலாம் என முதல் மந்திரி ரங்கசாமி அறிவித்தார்.

மேலும், புதுச்சேரி சட்டப்பேரவையில் விதவை உதவித்தொகை ரூ.2,500-லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,500 இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சியில் தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com