சபரிமலையில் பெண்கள் அனுமதி: மகளிர் ஆணைய தலைவி வரவேற்பு

சபரிமலையில் பெண்கள் அனுமதியளித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு மகளிர் ஆணைய தலைவி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் பெண்கள் அனுமதி: மகளிர் ஆணைய தலைவி வரவேற்பு
Published on

புதுடெல்லி,

தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா கூறும்போது, அரசியல்சாசனம் அனைவருக்கும் சமஉரிமை கொடுத்துள்ளது. ஆனால் மதரீதியான இடங்களில் காட்டப்படும் பாகுபாடு அதற்கு தடையை ஏற்படுத்துகிறது. ஒருபுறம் நாம் மாதவிடாய் என்பது உயிரியல் காரணி என்று சொல்கிறோம். மற்றொருபுறம் இந்த சமயத்தில் பெண்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று சொல்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு முற்றிலும் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளது என்றார்.

டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்கள் அனைத்துவிதத்திலும் ஆண்களுக்கு சமம். பெண்களும் கோவில், மசூதி, தேவாலயம், குருத்வாரா என அனைத்து மதவழிபாட்டு தலங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இதை நடைமுறைக்கு கொண்டுவந்த சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com