நவராத்திரி கொண்டாட்டம்: கொரோனா கவச உடை அணிந்து நடனமாடிய பெண்கள்

குஜராத் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா கவச உடை அணிந்து இளம் பெண்கள் நடனமாடினர்.
நவராத்திரி கொண்டாட்டம்: கொரோனா கவச உடை அணிந்து நடனமாடிய பெண்கள்
Published on

காந்திநகர்,

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனதில் வைத்து பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நவராத்திரியை முன்னிட்டு கர்பா விழா ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் களை கட்டியது. இந்த நிலையில் கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளம்பெண்கள் கொரோனா கவச உடை அணிந்து நடனமாடினர்.

இதுகுறித்து கர்பா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இந்த நடனத்தை ஒழுங்கு செய்ததாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com