பெண்கள் இட ஒதுக்கீடு: உடனடியாக அமல்படுத்த காங்கிரஸ் கோரிக்கை

நரேந்திர மோடி பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியே ஆக வேண்டும்.
பெண்கள் இட ஒதுக்கீடு: உடனடியாக அமல்படுத்த காங்கிரஸ் கோரிக்கை
Published on

புது டெல்லி,

காங்கிரஸ் ஆதிகாரபூர்வ எக்ஸ் தள பதிவில் தெரிவித்தாவது:-

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை மோடி அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையாகும்.

கடந்த 2023-ஆம் ஆண்டில் காங்கிரஸ் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது. அதை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் மேலும் மக்களவையின் 543 தொகுதிகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

இக்கோரிக்கைகளை முன்வைத்து, மகிளா காங்கிரஸ் அமைப்பினர் இன்று பாஜக அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

என்ன நடந்தாலும் சரி, நரேந்திர மோடி பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியே ஆக வேண்டும். நாட்டின் பெண்களின் உரிமைகளை அவரால் பறித்துவிட முடியாது.

இவ்வாறு அதில் தெரிவித்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com