

புதுடெல்லி
2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
அதன் முக்கிய அமசங்கள் வருமாறு:-
* பழங்குடியினரின் குழந்தைகளுக்கான கல்விக்காக ஏகலவ்யா என்ற தனித்திட்டம் தொடங்கப்படும்
* குஜராத்தின் வதோதரா நகரில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்
* பி.டெக் மாணவர்கள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு பி.எச்டி படிக்க உதவி செய்யப்படும்
* கிராமப்புற வேலைவாய்ப்பு, நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு
* அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூ.51 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்
* கிராமப்புற வேலைவாய்ப்பு, நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு;நாடு முழுவதும் தரமான கல்வி வழங்கும் வகையில் ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுக்ஷ்
* பள்ளிகளில் கரும்பலகைகள் அகற்றப்பட்டு டிஜிட்டல் போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளது
* ஏழைகளுக்கான இலவச சிலிண்டர் இணைப்புத் திட்டம் மேலும் விரிவு படுத்தப்படும்
* கிசான் கிரெடிட் கார்டு வசதியை மீன்வளம் மற்றும் கால்நடை துறைக்கு விரிவாக்கம் செய்ய பரிந்துரை; மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 75,000 கோடி கடன் வழங்க இலக்கு
#BJP | #UnionBudget | #Budget2018 | #IndianEconomy #Farmers | #Agriculture #Vegetables #ArunJaitley