உச்சநீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் பணிகள் தொடக்கம்

உச்சநீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
உச்சநீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் பணிகள் தொடக்கம்
Published on

புதுடெல்லி,

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியான எஸ்.ஏ.போப்டேவின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நிறைவடைகிறது. எனவே புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. அந்தவகையில் அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம்? என்பதை பரிந்துரைக்குமாறு தற்போதைய தலைமை நீதிபதிக்கு மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி தகுதியான மிக மூத்த நீதிபதியை தற்போதைய தலைமை நீதிபதி பரிந்துரைப்பார். அவரின் பரிந்துரையை பெற்றபின் அது குறித்து ரவிசங்கர் பிரசாத் பிரதமர் மோடிக்கு தெரிவிப்பார். பின்னர் அவர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படுவார். தலைமை நீதிபதி பரிந்துரைக்கும் நபரின் தகுதியில் ஏதாவது சந்தேகம் எழுந்தால், பிற நீதிபதிகளுடன் அரசு கலந்தாலோசித்து புதிய தலைமை நீதிபதியை இறுதி செய்யும்.

தற்போதைய நிலையில் மிக மூத்த நீதிபதியாக என்.வி.ரமணா உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com