பசுமாட்டிடம் தகாத உறவு தொழிலாளி கைது

சிக்பள்ளாப்பூரில் பசுமாட்டிடம் தகாத உறவில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பசுமாட்டிடம் தகாத உறவு தொழிலாளி கைது
Published on

சிக்பள்ளாப்பூர்

சிக்பள்ளாப்பூர் தாலுகா வார்டு எண் 8-ல் வசித்து வருபவர் சுரேஷ்.விவசாயி. இவர் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து பசுமாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது பசுமாடுகள் நள்ளிரவு நேரம் சத்தம் போட்டு கொண்டிருந்தது.

இதனால் சுரேஷிற்கு சந்தேகம் ஏற்பட்டது. பசுமாடுகளுக்கு உடல் நலகுறைவு ஏற்பட்டிருக்கும் என்று நினைத்தார். ஆனால் பகல் நேரங்களில் பசுமாடுகள் சுறுசுறுப்பாக இருந்தது. இந்தநிலையில் நள்ளிரவு நேரம் மர்மநபர் ஒருவர் கொட்டகைக்கு வந்து செல்வது தெரியவந்தது.

அவர் அந்த பசுமாடுகளிடம் தகாதமுறையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் நள்ளிரவு நேரம் பசுமாடுகள் சத்தமிட்டத்தை அறிந்து கொண்டார். இதையடுத்து அவரை கையும், களவுமாக பிடிக்க சுரேஷ் திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் இரவு அந்த நபர் வந்து பசுமாடுவிடம் தகாதமுறையில் நடந்து கொண்டார்.

இதை அறிந்த சுரேஷ் உடனே சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசாருக்கு புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த இடத்தின் அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் மர்மநபர் ஒருவர் மாட்டு கொட்டகைக்கு வந்து பசுமாடுவிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரியவந்தது. இதையடுத்து நேற்று போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கொல்கத்தாவை சேர்ந்த ராகுல் என்பது தெரியவந்தது.

சிக்பள்ளாப்பூரில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com